விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள்

திருச்சி வடக்கு மாவட்ட தே.மு.தி.க.சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2023-08-25 19:56 GMT

திருச்சி வடக்கு மாவட்ட தே.மு.தி.க.சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை கட்சியினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தா.பேட்டையை அடுத்த தேவானூர் சண்முககிரி மலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தே.மு.தி.க. திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் நிர்வாகிகளுடன் பங்கேற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து லால்குடியில் மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு, ஆதிதிராவிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அன்னதானம் உள்ளிட்டவைகளை அவர் வழங்கினார். மேலும் தொட்டியம், கார்த்திகைபட்டி, முசிறி, துறையூர், நெ.1டோல்கேட், லால்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் நிர்வாகிகளுடன் சென்று கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.

பங்கேற்றோர்

தொடர்ந்து அவர் தா.பேட்டையை அடுத்த பைத்தம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தே.மு.தி.க. கிளை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புதிதாக கண்காணிப்பு கேமரா வழங்கினார். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் லா.நா.முருகேசன், மாவட்ட துணை செயலாளர்கள் மகாமுனி, சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார் சண்முகவேல், கனகராஜ், துரை.சதீஷ்குமார், செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், ஜெயராமன், பாக்கியராஜ், செல்லதுரை, சரவணன், தங்கமணி, கார்த்திக், தேவராஜ், நகர செயலாளர்கள் சுந்தர்ராஜ், சங்கர், பாலமுருகன், பேரூர் கழக செயலாளர்கள் அர்ஜுனன், மகாமுனி, தர்மராஜ், நடராஜ் மற்றும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு இடங்களில் கட்சியினர் கொடியேற்றியும், இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்