டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்
'பத்மஸ்ரீ' டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
அரசு சார்பில் மரியாதை
தமிழக அரசு சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆதித்தனார் கல்வி நிறுவனம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைகுருச்செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா மற்றும் அனைத்து கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், கல்வி நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர், அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செயலாளர் அந்தோணி சகாய சித்ரா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான செங்குழி ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகர செயலாளர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், ரேவதி, முத்துஜெயந்தி, தலைமை கழக பேச்சாளர் பாலகிருஷ்ணன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வரண்டிவேல் பஞ்சாயத்து தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி கலையரசு, மாவட்ட கழக துணை செயலாளர் சோபியா, ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணை செயலாளர் பக்கீர், ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர்கள் லிங்கராஜ், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய செயலாளர் நவீன்குமார், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி நகர பஞ்சாயத்து கவுன்சிலர் பாலாஜி, தென்திருப்பேரை நகர செயலாளர் முருகபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் தலைவர் சிவஆனந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவுன்சிலர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைப்பு செயலாளர் என்.சின்னதுரை, மாவட்ட அவை தலைவர் திருபாற்கடல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சுதாகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், பாசறை செயலாளர் தனராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், தாமோதரன், ராஜ்நாராயணன், ஒன்றிய அவை தலைவர் லிங்ககுமார், நகர செயலாளர்கள் மகேந்திரன், கோபால கிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி கே.ஆர்.எம்.எஸ். சுந்தர், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பூந்தோட்ட மனோகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராஜ்குமார், துணை செயலாளர் சுரேஷ், இளைஞரணி ஒன்றிய செயலாளர் ஜான்வில்லியம், நங்கைமொழி ஊராட்சி மன்ற தலைவர் விஜயராஜ், மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிசந்திரன் யூனியன் கவுன்சிலர் செல்வன், உடன்குடி ஒன்றிய பொருளாளர் குலசை சங்கரலிங்கம், நகர பொருளாளர் வன்னிராஜ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த ப்பட்டது. முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டி.ஆர் ராஜகோபால், கழக பேச்சாளர் கருணாநிதி, கெய்னஸ், ராஜசேகர் சிறுபான்மை பிரிவு தொகுதி செயலாளர் அசன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜீவா பாண்டியன், தூத்துக்குடி முன்னாள் வட்ட கழக செயலாளர்கள் அன்புலிங்கம், கோட்டாளம் முத்து, அசோக், ஹரிகிருஷ்ணன், தூத்துக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பால்ராஜ், அரசு போக்குவரத்து தூத்துக்குடி மண்டல செயலாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி அசரியான், மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் பாலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க.
தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சித்தராங்கதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், இளைஞரணி பொது செயலாளர் பூபதி பாண்டியன், ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணகுமார், நகர தலைவர் நவமணிகண்டன், மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவர் செல்வகுமரன், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஸ்டீபன் லோபோ, முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார், மாவட்ட கல்வி திருச்செந்தூர் மண்டல தலைவர் கிருஷ்ணன், திருச்செந்தூர் மகளிரணி தலைவர் சந்திரா, நகர பொது செயலாளர் மீனாட்சி, துணை தலைவர் செல்வி, பொருளாளர் கார்த்திகை கந்தன், சிறுபான்மை அணி நகர தலைவர் பிரேமா, வர்த்தக அணி நகர தலைவர் சண்முகஆனந்த், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஓ.பி.சி. மாவட்ட தலைவர் ராஜ்குமார், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜகுமரன், ஆறுமுகநேரி நகர விவசாய அணி செயலாளர் கனகராஜ், திருச்செந்தூர் வட்டார மகளிர் அணி துணை தலைவர் சூரியகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற பொறுப்பாளர் ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையாபாண்டியன், தொகுதி தலைவர்கள் பாக்கியராஜ், நெப்போலியன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர் மோகன்ராஜ், ஒன்றிய பொருளாளர் அன்சார்அலி, மகளிர் பாசறை அன்னலட்சுமி, நாசரேத் நகர தலைவர் பிரேம்குமார், நகர செயலாளர் ரமேஷ், மாசாணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.
அ.ம.மு.க. சார்பில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏரல் ரமேஷ், மாவட்ட கழக துணை செயலாளர் இல்லங்குடி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், அம்மன் டி.நாராயணன், நகர தலைவர் அய்யப்பன், நகர செயலாளர் முருகேசன், மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் வைரவராஜ், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு செயலாளர் அப்துல்காதர், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை தலைவர் அருள், மாவட்ட விவசாய அணி செயலாளர் கோவிந்த பாண்டியன், நகர இளைஞரணி தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காயல்பட்டினம் நகர செயலாளர் அம்பேத், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், திருச்செந்தூர் நகர துணை செயலாளர் ஜெயபால், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ், மீனவர் மேம்பாட்டு பேராயத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் முத்துராமன், திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன், திருச்செந்தூர் நகர துணை அமைப்பாளர்கள் ராம்குமார், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் ராஜூ, நகர தலைவர் முத்துராஜ், செயலாளர் வேல்முருகன், செய்தி தொடர்பாளர் ஆனந்த், கார்த்தீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காயாமொழி
காயாமொழி ஊர் மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தேசிகா அறக்கட்டளை நிறுவனர் குமரகுரு ஆதித்தன், வரதராஜா ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் சங்க துணை தலைவர் திருநாவுக்கரசு, மற்றும் சின்னத்துரை, நாராயணன், முத்துக்குமார், ஜி சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நற்பணி மன்றம்
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் காயாமொழி நற்பணி மன்ற செயலாளர் முகத்தும் முகத்தீன், ஆயுட்கால உறுப்பினர்கள் அம்பி கண்ணன், அஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்ட நற்பணி மன்றம் சார்பில் மன்ற தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. வக்கீல் சந்திரசேகரன், நெல்லை மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி, உறுப்பினர் செல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காயாமொழி டாக்டர் சிவந்தி நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மன்ற தலைவர் முருகன் ஆதித்தன், பொருளாளர் ராஜேந்திர ஆதித்தன், முன்னாள் யூனியன் துணை தலைவர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் கண்ணன், கோபால் சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடார் வியாபாரிகள் சங்கம்
திருச்செந்தூர் நாடார் உறவின்முறை முன்னேற்ற சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைவர் சு.க.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் மாணிக்கம், தட்சணமாற நாடார் சங்க டைரக்டர் ராகவன் மற்றும் சாமுவேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரி சங்கம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்வின் நாடார், துணைத் தலைவர் அழகேசன், துணை செயலாளர்கள் சத்தியசீலன், முருகன், உறுப்பினர்கள் பாலமுருகன், கோடீஸ்வரன், தங்க குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தொழில் அதிபர்கள் தண்டுபத்து ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
திருச்செந்தூர் வக்கீல்கள் சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. வக்கீல்கள் நடேச ஆதித்தன், திலீப் குமார், சரவணன், முத்துச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.