தமிழ் புத்தாண்டையொட்டிஈரோட்டில் பழங்கள் விற்பனை அமோகம்

தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோட்டில் நேற்று பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

Update: 2023-04-13 21:34 GMT

தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோட்டில் நேற்று பழங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

சித்திரைக்கனி

சித்திரை மாத பிறப்பை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டு ஆகும். சித்திரைக்கனி என்று அழைக்கப்படும் இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

இதையொட்டி பொதுமக்கள் தங்கள் வீட்டில் பழங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதற்காக ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று பொதுமக்கள் பழங்கள் வாங்கினார்கள். அதனால் பழக்கடைகளில் பழங்கள் விற்பனை அமோகமாக இருந்தது.

விலை உயர்வு

ஈரோட்டில் நேற்று விற்பனையான பழங்களின் விலை கிலோவில் வருமாறு:-

மாதுளை - ரூ.180, ஆப்பிள் - ரூ.180, சாத்துக்குடி - ரூ.80, மாம்பழம் - ரூ.70, திராட்சை - ரூ.80, சப்போட்டா- ரூ.50, ஆரஞ்சு பழம் - ரூ.120, கொய்யாப்பழம்- ரூ.60-க்கும் விற்பனையானது. இதேபோல் வாழைப்பழம், எலுமிச்சை பழம் மற்றும் பலாப்பழம் விற்பனையும் அமோகமாக நடந்தது.

இதுகுறித்து ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் பழக்கடை வைத்திருக்கும் பழ வியாபாரி ஒருவர் கூறும்போது, 'கோடை காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் பழங்களை வாங்கிச்செல்கிறார்கள். மேலும் தமிழ் புத்தாண்டையொட்டியும் பழ விற்பனை அமோகமாக இருந்தது. இதன் காரணமாக அனைத்து பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்