பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி, போடி பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சோம வார பிரதோஷத்தையொட்டி நேற்று, போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சிவ பெருமான் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் சிவ பெருமானுக்கு வாழைக்காய்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் சுப்பிரமணிய சுவாமி கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பரமசிவன் மலைக் கோவில், பிச்சாங்கரை கீழசொக்கநாதர் கோவில், மேலசொக்கநாதர் கோவில், சத்திரம் விநாயகர் கோவில், சண்முக சுந்தரபுரம் பரமசிவன் கோவில் ஆகிய கோவில்களில் சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.