பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான கரும்புகள்

பொங்கல் பண்டிகையையொட்டி தேவதானப்பட்டி பகுதியில் கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

Update: 2022-12-20 18:45 GMT

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் மற்றும் தேவதானப்பட்டி பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தேவதானப்பட்டி பகுதியில் காமாட்சி அம்மன் கோவில், மஞ்சளாறு அணை பகுதியில் கரும்பு விளைவிக்கப்படும் கரும்பிற்கு தனி சுவை உண்டு. இந்நிலையில் இந்த பகுதியில் தற்போது 100 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவை தற்போது விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் கரும்பு அறுவடை செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே வியாபாரிகள் கரும்பிற்கான முன் பணத்தை விவசாயிகளிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. இந்த வருடம் உரம், கூலி ஆட்கள் உள்ளிட்ட செலவு அதிகரித்துள்ளதால் கரும்பிற்கு கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். மேலும் விவசாயிகளிடம் அரசு நேரடியாக கரும்ைப கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்