பொங்கல் பண்டிகையை முன்னிட்டுசெங்கரும்பு வரத்து அதிகரிப்பு
கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு வரத்து அதிகரித்துள்ளது.
கோவில்பட்டி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று கோவில்பட்டிக்கு செங்கரும்பு கட்டுகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த கரும்புகள் தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் கரும்பு கட்டுகள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த கரும்புகளை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.