ஓணம் பண்டிகையையொட்டிநீலகிரியில், வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரியில், வருகிற 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-17 18:45 GMT

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேலும் விடுமுறை நாளை ஈடுசெய்ய அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்