சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கோவில்பட்டி:
நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினா். மதுரை கோட்ட வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் வி.சந்திரன் தலைமையில் பயணிகளின் உடமைகள் மற்றும் ரெயில் நிலைய வளாகத்தில் நின்ற வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், ரெயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன.