ஏகாதசியையொட்டிசீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சர்வ ஏகாதசியையொட்டி நேற்று, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Update: 2023-09-10 18:45 GMT

சர்வ ஏகாதசியையொட்டி நேற்று, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஸ்ரீதேவி பூதேவியுடன், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்