தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-06 18:45 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி-மைசூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு கட்டண ரெயில்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி மைசூர்-தூத்துக்குடி சிறப்பு கட்டண ரெயில் 21.10.22 அன்று மதியம் 12.05 மணிக்கு மைசூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரெயில் 22.10.22 அன்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூர் சென்று சேரும்.

பெட்டிகள்

இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்