தீபாவளி பண்டிகையையொட்டி மதுக்கடைகளை மூட வேண்டும்: சிவசேனா கட்சியினர் கோரிக்கை
தீபாவளி பண்டிகையையொட்டி மதுக்கடைகளை மூட வேண்டும் என சிவசேனா கட்சியினர் கோரிக்ைக விடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சிவசேனா கட்சி மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தினத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் வாகன விபத்துகள், குடும்ப வன்முறைகள் அதிக அளவில் நடக்கின்றன. எனவே, தீபாவளி பண்டிகை நாளிலும், அதற்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளிக்கு மறுநாள் ஆகிய 3 நாட்கள் விபத்துகள், வன்முறைகள் நடக்காமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.