பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2022-07-08 16:39 GMT

செஞ்சி, 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். அந்த வகையில் வாரச்சந்தைக்கு சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி வழக்கத்தை விட ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ரூ.6 கோடிக்கு விற்பனை

இந்த ஆடுகளை சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதில் குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையிலும், கருப்பு ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நடைபெற்ற வாரச்சந்தையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ.6 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை செய்ய மற்றும் வாங்குவதற்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்ததால் நேற்று வாரச்சந்தை பரபரப்புடன் காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்