களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
களக்காடு:
களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இந்த மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து நேற்று சுற்றுலா பயணிகள் தலையணையில் தங்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.