கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பிரச்சினையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்
கழிவுநீர் கால்வாய் பிரச்சினையில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கப்பட்டார்.
ஆம்பூர்
கழிவுநீர் கால்வாய் பிரச்சினையில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் ரமணி. இவரது கணவர் ராஜசேகர் (வயது 56), தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (54). கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடர்பாக ராஜசேகருக்கும் இளங்கோவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த இளங்கோவன் ராஜசேகரை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் இளங்கோவன் மீது உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.