ஆவணி முதல்நாளில் உமையநாயகி அம்மன் கோவில் நடை திறப்பு

சாயல்குடி அருகே ஆவணி முதல்நாளில் உமையநாயகி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டது.

Update: 2023-08-18 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி கிராமத்தில் உமையநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டு ஆவணி முதல் நாளில் நடைதிறப்பது வழக்கம். அதன்படி ஆனி மாதம் கடைசி நாளில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது. ஆடி மாதத்தில் உமையநாயகி அம்மன் நடந்தே ராமேசுவரம் சென்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதாகவும், ராமநாதசுவாமி, பர்வர்த்தினிஅம்மாளை தரிசித்து அங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவதாகவும் ஐதீகம் உள்ளது. இ்ந்த நிலையில் ஆவணி மாத முதல்நாளில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்