ஏரலில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்பு

ஏரலில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்றார்.

Update: 2022-09-22 18:45 GMT

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஏரல் சினிமா தியேட்டர் அருகில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஏரல் பேரூர் செயலாளர் அசோக்குமார் வரவேற்று பேசினார். அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், தலைமை கழக பேச்சாளர் சவுண்டு சரவணன், நெல்லை காவியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் சிறப்பு விருந்தினராக தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். இ்க்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ்நாராயணன், விஜயகுமார், சவுந்தரபாண்டி, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்