பர்கூர் மலைப்பாதையில்தடுப்புச்சுவர் மீது மொபட் மோதி முதியவர் சாவு

பர்கூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது மொபட் மோதியதில் முதியவர் இறந்தாா்.

Update: 2023-05-11 21:11 GMT

ஈரோடு அருகே உள்ள புது காலனி பெரிய சேமூர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 65). இவர் கர்நாடக மாநிலம் கேம்பன் செட்டி என்ற ஊரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

பர்கூர் மலைப்பாதையின் முதல் கொண்டை ஊசி வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மொபட் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்