ஏரலில், 29-ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ஏரலில், 29-ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
தூத்துக்குடி ஊரக கோட்டத்தில் உள்ள ஏரல் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த கூட்டம் நேற்று நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் வருகிற 29-ந் தேதி மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை, தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்து உள்ளார்.