கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில்பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்கு
கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உயர்கோபுர மின்விளக்குகள் பகலில் எரிந்து கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகள் சீரமைக்கப்பட்டு முக்கிய நகரங்களான வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையோரம் ஊர் பெயர். தூரம் ஆகிய வழிகாட்டி தூண்களும், முக்கிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகளும் உள்ளன.
குறிப்பாக கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாச்சி பண்ணை அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாகவே பகலில் தொடர்ந்து எரிகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அப்பாச்சி பண்ணை அருகே பகலில் எரியும் உயர்கோபுர மின்விளக்கை கண்காணித்து இரவில் மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.