கூடலூர் நகரை தூய்மையாக வைப்பது குறித்துவிழிப்புணர்வு பிரசாரம்
கூடலூர் நகரை தூய்மையாக வைப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
தேனி மாவட்டத்தில் கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. நகரின் அனைத்து வார்டுகளில் இருந்தும் குப்பைக்கழிவுகள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் நகரின் முக்கிய வீதிகளில் கொட்டப்படும் கழிவுப்பொருட்கள் தினந்தோறும் அகற்றப்படுகிறது.
ஆனால் சிலர் வீதிகளில் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, கூடலூர் பஸ் நிலைய பகுதியில் நகரை தூய்மையாக வைப்பது குறித்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாடக கலைக்குழுவினர் நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகராட்சி சுகாதார அலுவலர் விவேக் செய்திருந்தார்.