டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நேற்று டி.என்.பாளையத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.என்.பாளையம் அரசமரத்து பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலத்தை தனியார் வேளாண்மை கல்லூரி முதல்வர் கல்யாண சுந்தரம் தொடங்கி வைத்தார்.பங்களாப்புதூர் அரசு பள்ளிக்கூட, தனியார் வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக நடந்து சென்றனர். ஊர்வலத்தின்போது புலிகள் பாதுகாப்பு குறித்து பதாகைகள் ஏந்திக்கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பங்களாப்புதூர் அரசு பள்ளிக்கூடத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் டி.என்.பாளையம் வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனவர்கள், வனக்காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.