மத்திய கல்வி அமைச்சகம் சார்பில்மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், தேனியில் மாவட்ட அளவிலான ஓவிய ேபாட்டி நடந்தது.

Update: 2023-01-20 18:45 GMT

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் சார்பில், நாடு முழுவதும் மாணவ, மாணவிகளிடம் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்வும், தெளிவும் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்ட அளவிலான ஓவிய போட்டி தேனி லைப் இன்னவேஷன் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் பங்கேற்க பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் எம்.எம். பல் மருத்துவமனை டாக்டர் பாஸ்கரன், முருகன், லட்சுமிவாசன், மாரிசெல்வம், கேசவன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர். முன்னதாக பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்