திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்கப் பேரவை சார்பில் வைக்கம் போராட்டம் 100-வது ஆண்டு மற்றும் தோள் சீலை போராட்டம் 200-வது ஆண்டு நினைவு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சமூக நல்லிணக்க பேரவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து வரவேற்று பேசினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, ஒன்றிய செயலாளர் சங்கத்திமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளரும், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி கலந்து கொண்டு பேசினார். மேலும், தி.மு.க. மருத்துவர் அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், காயல் சமூக நீதி பேரவை மாநில செயலாளர் வக்கீல் அகமது சாஹிப், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில், காமராஜர் மக்கள் இயக்க தலைவர் சுரேஷ், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வி, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, அந்தோணிராஜ், நகர செயலாளர்கள் தெளபிக் அன்சாரி, அம்பேத், அய்யப்பன், துரை, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் இளமாறன், துணை அமைப்பாளர் கோட்டை சரவணன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் பாபா சாகிப் அருண், விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண் ராஜ், துணை செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.