வருமான வரித்துறை சார்பில்முன்கூட்டியே வரி செலுத்த விழிப்புணர்வு கூட்டம்
வருமான வரித்துறை சார்பில், முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து தொழில் அதிபர்கள், வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தேனியில் நடைபெற்றது.
வருமான வரித்துறை சார்பில், முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து தொழில் அதிபர்கள், வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தேனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மதுரை வருமான வரி உதவி ஆணையர் பூவலிங்கம் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முன்கூட்டியே வரி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நாட்டின் வளர்ச்சிக்கு முறையாக வரி செலுத்துவதால் ஏற்படும் பயன்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் வணிகர்கள், தொழில் அதிபர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
முன்னதாக தேனி வருமான வரி அதிகாரி பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வருமான வரி அதிகாரி மோகன்தாஸ் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து டிஜிட்டல் திரை காட்சிகள் மூலம் விளக்கினார். இதில் தொழில்அதிபர்கள், வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் வருமான வரி ஆய்வாளர் லலிதாபாய் நன்றி கூறினார்.