சமத்துவ மக்கள் கட்சி சார்பில்நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கடலையூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள கடலையூரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ச.ம.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். பாஸ்கரன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர செயலாளர் பழனி முருகன், லிங்கம்பட்டி கிளை செயலாளர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.