சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி சார்பில்நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 21-ந் தேதி முதல் 7 நாட்கள் நடுவக்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தட்டார்மடம், முத்தம்மாள் கிராமங்களில் நடந்தது. முகாமை கணிதவியல்துறை தலைவர் ஜமுனாராணி, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் நா. மாரியம்மாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கிராமங்களில் உள்ள அண்ணாள்நகர், நயினார் புரம், கணேஷ் நகர், முத்தம்மாள் புரம், பிள்ளையார் தெரு, ஏஞ்சல் நகர் பகுதியில் மாணவிகள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். முகாம்நாட்களில் தினமும் கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் சக்திஸ்ரீ மற்றும் கணிதவியல் துறைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் கலந்து கொண்டார். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நா. உமாபாரதி, சி. வளர்மதி ஆகியோர் செய்திருந்தனர்.