நாடார் இளைஞர் மஞ்சள் நீராட்டு குழு சார்பில்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

கோவில்பட்டியில் நாடார் இளைஞர் மஞ்சள் நீராட்டு குழு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி யம்மன் கோவில் சித்திரை திருவிழா 10-ம் நாளை முன்னிட்டு பொங்கலிடுதல், மாலையில் மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு அடைக்கலம் காத்தான் மண்டபம் முன்பு நாடார் இளைஞர் மஞ்சள் நீராட்டு விழா குழுவின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இளைஞர் சங்க தலைவர் எம். ஜோதி பாசு தலைமை தாங்கினார்.

துணை தலைவர் சந்திரசேகர், செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் விஜயகுமார், துணை செயலாளர்கள் சுரேஷ், தங்க மாரியப்பன், தெய்வேந்திர பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏ. பி. கே. பழனிச்செல்வம் கலந்து கொண்டு 2 பேருக்கு தையல் ஒந்திரம், 3 பேருக்கு சைக்கிள்கள், கல்வி உதவித்தொகை, இலவச வேட்டி- சேலைகளை வழங்கினார். விழாவில் தொழிலதிபர்கள் எம். எஸ். எம்.ஆர். ஜெய பிரகாஷ் மற்றும் நன்கொடையாளர்கள் கலந்து கொண்டணரே.

இதனைத் தொடர்ந்து சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன்- பூஜா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்