டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி சார்பில்நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2023-03-27 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தளவாய்புரம் பொதுநல ஐக்கிய சங்க தொடக்கப் பள்ளியில் கடந்த 20-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 7 நாட்கள் நடந்தது. இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் ஊர் கோவிலை சுத்தம் செய்தல், மரம் நடுதல், யோகா பயிற்சி, இலவச கண் பரிசோதனை, விளையாட்டு போட்டிகள், பிரமிட் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றன. முகாம் நிைறவு விழாவுக்கு பள்ளி சத்துணவு அமைப்பாளர் வசந்தி கிரேஸ் தலைமை தாங்கினார். பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர் மகேஸ்வரன் வரவேற்று பேசினார். முன்னதாக பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர் லோகேஷ் அறிமுக உரையாற்றினார். பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர் அருண் சிறப்பு முகாம் அறிக்கையினை வாசித்தார். சிறப்பு விருந்தினராக தளவாய்புரம் பொது நல ஐக்கிய சங்க தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட பணிகளை சிறப்பாக செய்த கல்லூரி மாணவர்களை பாராட்டினார். கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆபிரகாம் சாம்சன், ஜெய கணேஷ் ஆகியோர் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர். பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர்கள் சூரிய பொன்முத்து சேகரன், அஜெய் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கினர். மேலும், முகாமினை சிறப்பாக வழிநடத்தியமைக்காக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷூக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியை பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர் வினித் தொகுத்து வழங்கினார். பி.பி.எட் 2-ம் ஆண்டு மாணவர் குமரகுரு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்