தி.மு.க.சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாளை அஞ்சலி செலுத்துகிறார்

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாளை அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2022-09-09 17:52 GMT

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாளை அஞ்சலி செலுத்துகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

நினைவு நாள்

பரமக்குடியில் நாளை (11-ந்தேதி) தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துகின்றனர். தி.மு.க.சார்பில் அஞ்சலி செலுத்த மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகிறார்.

அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி, டெல்லி பிரதிநிதி விஜயன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஆலோசனை கூட்டம்

அதற்கான ஆலோசனை கூட்டம் பரமக்குடி ஏ.பி.ஷா மகாலில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாநில தீர்மானக்குழு துணைத்தலைவர் திவாகரன், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்.ஏ.முருக வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வருகின்றனர். அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கழக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வர வேண்டும் என்றார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச்செயலாளர்கள் கருப்பையா, அகமது தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் பூமி நாதன், அருளாந்து, மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் சுஜாதா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணாமலை, வக்கீல் கதிரவன், குணசேகரன், நகர் இளைஞரணி அமைப்பாளர் சண் சம்பத் குமார், நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம், நகர் துணைச் செயலாளர் மும்மூர்த்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்