பயிர்களுக்கான சமச்சீர் உரங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம்

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய அளவிலான பயிர்களுக்கான சமச்சீர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2022-06-21 15:53 GMT

சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி தேசிய அளவிலான பயிர்களுக்கான சமச்சீர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப வல்லுனர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து கலந்துகொண்டு யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொழில்நுட்ப வல்லுனர்கள் அருண்ராஜ், சபரிநாதன், ராஜாராமன் ஆகியோர், உரங்கள், மண்ணின் தன்மை அறிதல், உயிர் உரங்களின் முக்கியத்துவம் போன்றவை குறித்து பேசினர். இதில் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்