தனியார் நிறுவன செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய பணியாளர் கைது

தூத்துக்குடியில் தனியார் நிறுவன செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய பணியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-12 18:45 GMT

தூத்துக்குடி அண்ணாநகர் மேற்கு பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைந்து உள்ளது. கடந்த மாதம் 9-ந் தேதி அந்த செல்போன் கோபுரத்தில் இருந்த 4 பேட்டரிகள் திருடப்பட்டது. இது குறித்து தனியார் நிறுவன செல்போன் கோபுர கண்காணிப்பாளர் அருள்பாண்டி அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், செல்போன் கோபுரத்தில் பணியாளராக வேலை பார்க்கும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வாவா நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் அழகுதுரை (வயது 33) என்பவர் செல்போன் கோபுரத்தில் உள்ள 4 பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பேட்டரியை திருடிய அழகுதுரையை கைது செய்தார். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 4 பேட்டரிகளையும் அவர் பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்