மோட்டார் சைக்கிள் மீதுமினி பஸ் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதல்; விவசாயி பலி
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே உள்ள மாங்குழி பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையின் காரணமாக வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திங்கள்சந்தை ரவுண்டானா அருகே உள்ள ராதாகிருஷ்ணன் கோவில் சந்திப்பு பகுதியில் வந்தபோது அவருக்கு பின்னால் வேகமாக வந்த மினிபஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் வின்சென்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வின்சென்ட் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய சகோதரர் தேவசகாயம் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினிபஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.