மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்ப ட்டாா்

Update: 2023-09-26 20:54 GMT

ஈரோடு வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்ததாக ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த சக்தி (வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைதான சக்தியின் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்