மோட்டார்சைக்கிள் மீதுபஸ் மோதி கட்டிட காண்டிராக்டர் பலி

போடிமெட்டுவில் மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி கட்டிட காண்டிராக்டர் பலியானார்.

Update: 2023-04-20 18:45 GMT

போடி சக்தி வெங்கடாசலபதி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்பிரபு (வயது 46). கட்டிட காண்டிராக்டர் நேற்று காலை இவர், போடியில் இருந்து மோட்டார்சைக்கிளில் போடிமெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். போடி-முந்தல் சாலையில் வளைவில் சென்றபோது, எதிரே மூணாறில் இருந்து தேனி நோக்கி வந்த கேரள அரசு பஸ் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் செந்தில்பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடிமாலியை சேர்ந்த கேரள அரசு பஸ் டிரைவரான ஜெயக்குமார் (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்