மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி 2 பேர் படுகாயம்

மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2022-06-06 17:52 GMT

போடி அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த கணேசன் மகன் ராகுல் (வயது 17). இவரது உறவினர் சஞ்சய் (20). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் போடியில் இருந்து அம்மாபட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சஞ்சய் ஓட்டினார். ரெங்கநாதபுரம் அருகே வந்தபோது போடி நோக்கி வந்த ஆட்டோ மோட்டார் சைக்கிளில் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்தில படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து ராகுல் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்