ஓம்.சரவணாபுரம் தொடக்கப்பள்ளியில்புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

ஓம்.சரவணாபுரம் தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் ஊராட்சி ஓம்.சரவணாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.28 லட்சத்தில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவுக்கு சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவர் சரோஜா கருப்பசாமி தலைமை தாங்கினார். விழாவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு இலவச தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் பாலமுருகன், யூனியன் உதவி பொறியாளர் பிரான்சிஸ்கோ சங்கரேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் பவனந்தீஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியயை பாத்திமா, ஊராட்சி செயலாளர் செந்தில் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்