ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து

திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

Update: 2022-11-11 18:45 GMT

திண்டிவனம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து நேற்று பகலில் 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 22 பயணிகள் இருந்தனர். பிரகாஷ் என்பவர் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ் நேற்று இரவு திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒலக்கூர் கூட்டுரோடு அருகே வந்தபோது பலத்த மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால் இருக்கைகளில் இருந்து திடுக்கிட் பயணிகள் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் காயம் அடைந்த ஒரு பயணியை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமின்றி உயிர்தப்பிய மீதமுள்ள பயணிகள் மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்