டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலி

கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். டிராக்டரும் 3 துண்டுகளாக பயங்கரமாக உடைந்து நொறுங்கியது.

Update: 2023-06-25 12:56 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். டிராக்டரும் 3 துண்டுகளாக பயங்கரமாக உடைந்து நொறுங்கியது.

டிராக்டர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சிறுநாத்தூர் கிராமம் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தவர் வேலாயுதம் (வயது 45). விவசாயி. இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கீழ்பென்னாத்தூருக்கு டிராக்டரை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பெங்களூருவிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் முன்னால் சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.

உடைந்தது

இதில் டிராக்டரை ஓட்டி வந்த வேலாயுதம், தலையில் பலத்த காயம் அடைந்தார். டிராக்டரும் 3 துண்டுகளாக உடைந்தது. விபத்து நடந்த இடத்திற்கு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று படுகாயம் அடைந்த வேலாயுதத்தை மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வேலாயுதம் இறந்து விட்டார்.

இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்