அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து

காந்திபுரத்தில் அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியது.

Update: 2023-02-27 18:45 GMT

காந்திபுரம்

திருத்தணியில் இருந்து கோவைக்கு நேற்று காலை அரசு விரைவு பஸ் வந்தது. பின்னர் அரசு விரைவு ேபாக்குவரத்து கழக பஸ்நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, பஸ்சை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே சிக்னலில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த ஆம்னி பஸ், எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில், அரசு பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோரத்தில் இருந்த கடை மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி கண்ணாடிகள் உடைந்து சேதமானது. மேலும் ஆம்னி பஸ்சில் வந்த பயணி ஒருவர் மட்டும் லேசான காயம் அடைந்தார். காலை நேரம் என்பதாலும், கடையின் அருகே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்