மொபட் மீது பஸ் மோதல்; சவரத் தொழிலாளி பலி

மொபட் மீது பஸ் மோதல்; சவரத் தொழிலாளி பலி

Update: 2022-11-02 14:27 GMT

போடிப்பட்டி

உடுமலை பாலப்பம்பட்டி பொதிகை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 45). சவரத் தொழிலாளி. இவர் உடுமலை கச்சேரி வீதி பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராதாகிருஷ்ணன் கடையை பூட்டி விட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பம்பட்டி அருகே அவர் வலது புறம் திரும்ப முயன்றதாக தெரிகிறது.அப்போது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ் ராதாகிருஷ்ணன் மீது பலமாக மோதியது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற உடுமலை போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பஸ்சை ஒட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியை சேர்ந்த டிரைவர் முரளிதரன் ( 37) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்