ஆலங்குளம்:
ஊத்துமலை அருகே தெற்கு மாவலியூத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தன் மனைவி நாகம்மாள் (வயது 80). இவர் வேப்பங்கொட்டை பொறுக்குவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் காட்டுப்பகுதியில் தேடி பார்த்தனர். அப்போது ஊருக்கு தெற்கே உள்ள பலபத்திரராமபுரத்தை சேர்ந்த ஒருவரது தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகம்மாளின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துமலை போலீசார், நாகம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.