வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலி

வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி பலியானார்.

Update: 2022-12-22 18:46 GMT

லாலாபேட்டை அடுத்த மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் அருங்கரை (வயது 80). இவர் நேற்று முன்தினம் காலை புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அருங்கரை வாய்க்காலில் மூழ்கினார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாய்க்காலில் இறங்கி மூதாட்டியை தேடினர். இரவு வெகுநேரம் ஆகியதால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் வாய்க்காலில் இறங்கி தீயணைப்பு படைவீரர்கள் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அருங்கரை பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்