மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தாா்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி ஆலம்மாள்(வயது 60). இவர் ஆடு வளர்த்து வந்தார். இவர் நேற்று காலை ஆலியம்மன் கோவிலின் பின்புறத்தில் உள்ள வயலுக்கு சென்றார் அப்போது மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆலம்மாள் இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆலம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.