பாம்பை கண்டு வேகமாக சென்றபோதுவாகனம் மோதி மூதாட்டி சாவு

Update: 2023-07-19 18:45 GMT

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே ஜாகிரி பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 75). நேற்று காலை சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மூதாட்டி சாலையில் நடந்து சென்றார். அங்கு வந்த பாம்பை கண்டு மூதாட்டி அஞ்சி வேகமாக சாலைக்கு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்