ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள மந்தித் தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த சங்கையா பாண்டியன் மனைவி சண்முகத்தாய்(வயது 70). இவர் நேற்று கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் பெட்ரோல் பங்க் பின்புறம் ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.