கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

உடல் நலக்கோளாறால் அவதியடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-24 19:26 GMT

இலுப்பூர் சந்தனபுரம் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. இவருடைய மனைவி இந்திராணி (வயது 62). இவர் உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திராணியை நேற்று முன்தினம் காலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இலுப்பூர் திருநாடு சாலையில் உள்ள கிணற்றில் மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் கிணற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை மீட்டனர். விசாரணையில் இறந்து கிடந்தது காணாமல் போன இந்திராணி என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இந்திராணி தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்திருந்த டைரியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்