மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
போடி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
போடி அருகே உள்ள தர்மத்துபட்டியை சேர்ந்தவர் குள்ளம்மாள் (வயது 90). இவர், தனது மகள் கோமதி பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது இவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் வலியால் அவர் அலறி துடித்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை குள்ளம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.