நெகமம்
நெகமத்தை அடுத்த வடசித்தூரில் வசித்து வந்தவர் துளசியம்மாள்(வயது 77). கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகளும் இல்லை. இதனால் தனியாக வசித்து வந்த துளசியம்மாள், தன்னை பராமரிக்க உறவினர்கள் யாரும் இல்லாததால் மனவேதனையுடன் இருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.