சின்னசேலத்தில்மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

சின்னசேலத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-10 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் புதுத்தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பாஞ்சாலை (வயது 65). இவர் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாஞ்சாலை இறந்து போனார். இதுகுறித்த புகாாின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்