நாமக்கல்லில் ரூ.9 லட்சத்துக்கு பழைய வாகனங்கள் ஏலம்

நாமக்கல்லில் ரூ.9 லட்சத்துக்கு பழைய வாகனங்கள் ஏலம்

Update: 2022-06-01 12:42 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட பழைய இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நேற்று நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு (ஆயுதப்படை) இளங்கோவன், அரசு தானியங்கி பொறியாளர் தேவிபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 16 இருசக்கர வாகனங்கள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 500-க்கும், 7 நான்கு சக்கர வாகனங்கள் ரூ.5 லட்சத்து 30 ஆயிரத்து 700-க்கும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 200-க்கு ஏலம் போனது. இந்த வாகனங்களில் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 586 ஜி.எஸ்.டி. தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ.9 லட்சத்து 6 ஆயிரத்து 786 வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்